உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருந்த கிராமங்களில் புதிய அத்தியாயம்!

மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருந்த கிராமங்களில் புதிய அத்தியாயம்!

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் இருந்த 92 கிராமங்களில், சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இதில் பிஜாப்பூர் மாவட்டத்தில் 33, சுக்மாவில் 50, நாராயண்பூரில் 9 கிராமங்கள் அடங்கும். பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தப் பகுதிகளில், இதற்கு முன்பு மாவோயிஸ்டுகளின் கொடிகளே பறந்தது. தற்போது சத்தீஸ்கரில் நக்சலிசம் மற்றும் இடதுசாரித் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் நிலைமை மாறியுள்ள நிலையில், ஹர் கர் திரங்கா இயக்கத்தின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆக 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ