ஈரான் - இஸ்ரேல் போரால் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் சிக்கல்? பிசிசிஐ விளக்கம்
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் எனப்படும் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தாெடர், மார்ச் 28ல் துவங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 19வது ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் துவக்க ஆட்டம், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 28ம் தேதி நடக்கிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆர்சிபியும், சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதவுள்ளன. அடுத்த போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகள், பெங்களூரு, மும்பை, கவுகாத்தி, லக்னோ, சண்டிகர், கொல்கத்தா, சென்னை, டில்லி, ஆமதாபாத், ஐதராபாத் ஆகிய 10 நகரங்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள், இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.