/ தினமலர் டிவி
/ பொது
/ இளைஞர் கொலை வழக்கில் மிக்சர் கடை ஓனர் உள்பட 4 பேர் கைது Bengaluru | Murder case
இளைஞர் கொலை வழக்கில் மிக்சர் கடை ஓனர் உள்பட 4 பேர் கைது Bengaluru | Murder case
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ். வயது 35. இவர் பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் பகுதியில் மிக்சர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் மிக்சர் போடும் மாஸ்டராக கே.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான பவன்குமார் (19), சந்தோஷ்குமார் (17) வேலை செய்து வந்தனர். அல்போன்ஸ் மனைவி சத்யா, பவன்குமாருடன் நன்றாக பழகி வந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பவன்குமாரும், அவரின் தம்பியும் வேலை செய்து வருவதால், அல்போன்ஸ் குடும்பத்தினருக்கு நம்பகமானவர்களாக இருந்துள்ளனர்.
அக் 03, 2025