உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனம்: டில்லி ஐஐடிக்கு மீண்டும் முதலிடம்

இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனம்: டில்லி ஐஐடிக்கு மீண்டும் முதலிடம்

#BestUniversitiesintheworld #TopRankingInstitutions #IndianUniversities #IITDelhi #IITBombay #IITMadras #QSRanking பிரிட்டனை சேர்ந்த குவாக்கர்லி சைமண்ட்ஸ் Quacquarelli Symonds எனும் நிறுவனம் உலக அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை ஆண்டு தோறும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை க்யூஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த பல முக்கிய பல்கலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. 106 நாடுகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக டில்லி ஐஐடி தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் இது 118 இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐஐடி பாம்பே, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர் ஆகிய நிறுவனங்கள் இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. பெங்களூரு ஐஐஎஸ்சி, டில்லி பல்கலை, ஐஐடி ரூர்கி, ஐஐடி கவுகாத்தி, ஹிமாச்சல பிரதேசத்தில் செயல்படும் பயோடெக்னாலஜி பல்கலைக்கழகம் ஆகியவை, நம் நாட்டின் சிறந்த 10 கல்வி நிறுவனங்களில் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மேற்கண்ட 10 கல்வி நிறுவனங்களும் உலக தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டிலயில் மொத்தம் 52 இந்திய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மேற்படிப்பு மையங்கள் இடம் பெற்றுள்ளன.

ஜூன் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை