உருமாறிய பவானி ஜமுக்காளம்: இப்போ ஸ்டார் ஹோட்டல் வரை கேட்குறாங்க | Bhavani Jamakkalam | Handloom
ஐரோப்பா பறக்கும் பவானி ஜமுக்காளம் அடையாளத்தை சிதைத்த விசைதறிகள்! இன்றைக்கும் தாம்பூலம் மாற்றி நிச்சயம் செய்வதில் ஆரம்பித்து திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, ஊர் கிராம பஞ்சாயத்து, கோயில் திருவிழாக்கள், கிராம சபை என தமிழகர்களின் சுப காரியங்கள் அனைத்திலும் முக்கிய இடம் பிடிப்பது பவானி ஜமுக்காளம். இப்படி புகழ்பெற்ற பவானி ஜமுக்காளத்துக்கு 2006ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க கையாலேயே உற்பத்தி செய்யப்படுவது இதன் தனி சிறப்பாகும். ஆனால் இப்போது விசைதறியில் உற்பத்தி செய்யப்படும் ஜமுக்காளமும் பாவனி ஜமுக்காளம் என்று சொல்லியே விற்கப்படுகிறது. விசைத்தறி கூடங்களில் நெய்து குவிப்பதால், பாரம்பரிய அடையாளத்தை, பவானி ஜமுக்காளம் இழந்து வருகிறது என்கிறனர் நெசவாளர்கள். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பவானி ஜமுக்காளம் பற்றிய கண்காட்சி நடத்தப்பட்டது.