தொல்லியல் துறை ஆய்வில் தெரியவந்த உண்மைகள் | madhya pradesh | bhojshala Dispute | ASI servey
போஜ்சாலா கோயிலா? மசூதியா? 2000 பக்க ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருப்பது என்ன? மத்திய பிரதேசத்தில் உள்ள தாரா பகுதியை 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த போஜ் மன்னர், வேதபாட சாலையுடன் கூடிய சரஸ்வதி கோயிலை கட்டினார். பிற்காலத்தில் அந்த பகுதியை கைப்பற்றிய முகலாய பேரரசர் அவுரங்கசீப், போஜ்சாலாவை மசூதியாக மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஒன்றரை ஏக்கரில் அமைந்துள்ள போஜ்சாலாவில் கல் மண்டபம் உள்ளது. இந்துக்கள் இதை சரஸ்வதி கோயில் எனவும், முஸ்லிம்கள், கமால் மவுலானா மசூதி என்றும் கூறி வருகின்றனர். பிரச்னை அதிகரித்ததால், போஜ்சாலாவை இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்தது. வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், செவ்வாய் கிழமைகளில் இந்துக்கள் பூஜை செய்யவும் 2003ல் தொல்லியல் துறை புதிய வழிகாட்டுதல் வழங்கியது. இதை எதிர்த்து, நீதிக்கான இந்து முன்னணி மத்திய பிரதேசத்தின் இந்தூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. ஆனால், போஜ்சாலாவில் கள ஆய்வு நடத்த ஐகோர்ட்டின் உத்தரவு பற்றி எதுவும் சொல்லவில்லை. எனவே, கடந்த மார்ச்சில் போஜ்சாலாவில் தொல்லியல் துறை ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை சுமார் 2000 பக்க அறிக்கையாக இந்தூர் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.