உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊழல் கட்சிகள் ஆர்ஜேடி, காங்கிரசை மக்கள் ஒருபோதும் நம்புவதில்லை bihar Election | modi speech

ஊழல் கட்சிகள் ஆர்ஜேடி, காங்கிரசை மக்கள் ஒருபோதும் நம்புவதில்லை bihar Election | modi speech

பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6,11 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். பெகுசராய் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பீகாரில் நடந்த காட்டாட்சியை அகற்றிவிட்டு நாங்கள் நல்ல ஆட்சியை தந்தோம். இப்போது மாநிலத்தை வளர்ச்சி பெற செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் ஓட்டுதான் பீகாரின் வளர்ச்சியை தீர்மானிக்க போகிறது. ஒரு புறம் அனுபவம் வாய்ந்த தலைவரின் கீழ் என்டிஏ கூட்டணி உள்ளது. மறுபுறம் மிரட்டலில் ஈடுபடும் கூட்டணி உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் ஆர்ஜேடி ஜெயிக்கவில்லை என்றாலும், ஆணவத்தில் சிக்கியிருக்கிறது. அந்த ஆணவம்தான் ஜேஎம்எம் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றியது. காங்கிரஸ் 35 ஆண்டுகளாக ஆர்ஜேடிக்கு ஆதரவளித்து வருகிறது. ஊழல் செய்வதே இரு கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. ஆர்ஜேடி கட்சி குடும்பத்தில் பெரும்பாலனவர்கள் ஊழல் செய்துள்ளனர். அவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். மறுபுறம் காங்கிரஸ் குடும்பமும் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம். இந்த இரண்டு கட்சிகளையும் பீகார் மக்கள் நம்புவதில்லை. காட்டாட்சி நடத்திய தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்குதான் எதிர்காலத்தை உருவாக்கினார்கள். பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்தார்கள் என பிரதமர் மோடி கூறினார்.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை