ராகுல் யாத்திரை ரூட்டில் காங்கிரஸ் முட்டை bihar election result |Rahul yatra |setback for congress
பீகார் தேர்தலில் பாஜ, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை அந்த கூட்டணி கைப்பற்றுகிறது. அதிகபட்சமாக பாஜ 90 சீட், நிதிஷ் குமாரின் ஜேடியு 84 சீட்களில் வெற்றி பெறுகின்றன. இண்டி கூட்டணியை பொறுத்தவரை வெறும் 35 சீட்களில் முடங்கி விட்டது. அதில் அதிகபட்சமாக ஆர்ஜேடி 25 சீட்களை வென்றுள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. போன முறை கூட 19 இடங்களை வென்று இருந்தது. இப்போது அதில் மூன்றில் ஒரு பங்கை கூட வெல்ல முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன்பு 2 கட்டமாக ராகுல் பாரத் ஜோடா யாத்திரை சென்றார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தார். லோக்சபாவில் எதிர்கட்சி தலைவர் ஆகும் அளவுக்கு அவரது நடைபயணம் கை கொடுத்ததாக காங்கிரசார் பெருமை பேசினர். முக்கிய திருப்பமாக தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதற்கும் ராகுல் மேற்கொண்ட யாத்திரை தான் காரணம் என்று அந்த மாநில காங்கிரசார் மார்தட்டினர்.