உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகார் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு Bihar election|Congress| RJD| JDU| Nitish| Rahul

பீகார் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு Bihar election|Congress| RJD| JDU| Nitish| Rahul

பீகாரில் கடந்த 6, 11ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 243 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 4 மணி நிலவரப்படி பாஜ - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி 210 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜ 1 இடத்தில் வெற்றி பெற்றது. 94 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் 5 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. மேலும் 81 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலும் முன்னிலை வகிக்கின்றன. பீகாரில் பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடி 24 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதன் தலைவர் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து பின்னிலை வகிக்கிறார். இந்நிலையில், லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் பீகார் தேர்தலில் போட்டியிட்ட 61 இடங்களில், 2 இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது தேசிய கட்சியான காங்கிரசுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் கமிஷன் மீது சுமத்திய புகார்கள், எஸ்ஐஆர் எதிர்ப்பு, பாஜ மீதான ஓட்டுத் திருட்டு புகார் என எதுவும் பெரிய அளவில் எடுபடிவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை, கிஷண்கஞ்ச் மற்றும் மணிஹரி தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி