சிசிடிவி காட்டிக்கொடுத்த திருடனை தேடும் போலீஸ்
சென்னை, கோவிலம்பாக்கம் அருகே வைத்தியலிங்கம் நகரில் உள்ள அபார்ட்மென்டில் வசிப்பவர் ரோஹித். நேற்றிரவு தமது யமஹா R15 பைக்கை அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. காம்பவுண்டுக்குள் நிறுத்திய வாகனம் காணாமல் போனது எப்படி என குழப்பம் அடைந்தார். உடனே சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தார். அப்போது இளைஞர் ஒருவர், கேட்டை திறந்து அலேக்காக டூவீலரின் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து ரோஹித் அதிர்ச்சி அடைந்தார்.
ஏப் 01, 2025