உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரங்களுக்கு தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா | Birthday ceremony for trees | Trichy | Green villages |

மரங்களுக்கு தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா | Birthday ceremony for trees | Trichy | Green villages |

திருச்சி மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது புதுப்பட்டி கிராமம். இங்குள்ள மக்கள் 2019 இறுதியில் கோரத்தாண்டவம் ஆடிய கோவிட் அலைக்கு பின் ஒரு படிப்பிணையை பெற்றனர். மூச்சு திணறலால் தவித்தவர்களில் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததால் மரங்களின் அவசியத்தை உணர்ந்து 2020ல் இருந்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கின்றனர். இவர்கள், மணப்பாறை புதுப்பட்டி, கீழபொய்கைப்பட்டி, நாயன்மார்கோவில், ரெங்ககவுண்டம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பல வகை மரக்கன்றுகளை நட்டுள்ளனர். 4 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த கிராமங்கள் பசுமை போர்வை போர்த்தியது போல் சோலை வனமாக மாறி மிடுக்காக காட்சியளிக்கின்றன.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி