உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டணி கட்சிக்கு பணி செய்த பிரச்னையில் பாஜ நிர்வாகிகள் மோதலால் சலசலப்பு! BJP | Election Work

கூட்டணி கட்சிக்கு பணி செய்த பிரச்னையில் பாஜ நிர்வாகிகள் மோதலால் சலசலப்பு! BJP | Election Work

சிதம்பரம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஏ.பாண்டியன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான பாஜவினரும் தீவிர பிரசாரம் செய்தனர். இந்நிலையில் தேர்தல் பணியில் பாஜ நகர தலைவர் குமாருக்கும், மாவட்ட செயலாளர் அகஸ்தியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அகஸ்தியரும் அவரது ஆதரவாளர்களும் குமாரை ஓட்டலுக்கு வரவழைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. கை, கால்களில் காயம் ஏற்பட்ட குமார் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதையடுத்து தன்னை தாக்கிய பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமார் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஏப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை