பொய்யை பரப்பும் ராகுல்: அனுராக் சொல்லும் காரணம் BJP MP Anurag Thakur|Rahul Gandhi|Congress vs BJP
வாக்கு திருட்டு குறித்தும் தேர்தல் முறைகேடு குறித்தும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, பாரதிய ஜனதா எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் கூறியதாவது ஒருவருடைய தலைமையில் ஒரு கட்சி 90 முறை தேர்தலில் தோற்றது சாதனையாக இருந்தால், அது ராகுல் தலைமையில்தான் நடந்துள்ளது. ராகுலின் கட்சிக்குள் கூட அவரது தலைமை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்தலில் தோற்கும்போது அவர் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மீது கேள்வி எழுப்புகிறார். பாரதிய ஜனதாவுக்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடிகள் செய்கின்றனர் என கூறினார். பின்னர் இயந்திரங்களுக்கு பதில் ஓட்டு சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றார். அதற்கு பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தொலைவில் இருந்து கூட ஹாக் செய்யலாம் என காங்கிரசார் கூறினார்கள். ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கு பிறகும் காங்கிரஸ் புதிய புதிய சாக்குகளை கண்டுபிடித்து சொல்லிக்கொண்டே இருக்கிறது.