உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கு வங்கத்தில் வெற்றியை உறுதி செய்ய மோடி யோசனை Bjp mps|Modi meeting|Delhi|

மேற்கு வங்கத்தில் வெற்றியை உறுதி செய்ய மோடி யோசனை Bjp mps|Modi meeting|Delhi|

ேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜ எம்.பி.க்களை பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து 2026 தேர்தல் தொடர்பாக பேசி உள்ளார். மேற்கு வங்கத்தில் இருந்து லோக் சபாவுக்கு 12 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 2 எம்பிக்கள் இருக்கின்றனர். இவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, நாம் கடினமாக உழைத்து மேற்கு வங்கத்தில் இந்த முறை வெற்றியை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் மாநிலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளீர்கள். மேற்கு வங்க அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜ எம்பி காகன் முர்மு Khagen Murmu போன்றவர்கள் மீதான திரிணாமுல் காங்கிரசின் வன்முறை தாக்குதல்களை மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். தேர்தலுக்கான முழுமையான திட்டமிடலை உறுதி செய்ய வேண்டும். இக்காலத்திற்கு ஏற்ப, சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மேற்கு வங்க எம்பிக்களிடம் யோசனை கூறினார். 2021க்கு முன்பு வரை மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருந்தனர். 2021 தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் சவாலான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் அக் கட்சியினரிடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பீகார் வெற்றி தந்த மகிழ்ச்சி அந்த உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. Bjpmps#Modimeeting #Delhi

டிச 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை