உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சரை அவமதிக்கும் போஸ்டர்கள் ஒட்டியது யார்?

அமைச்சரை அவமதிக்கும் போஸ்டர்கள் ஒட்டியது யார்?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற 56வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக ராணிப்பேட்டையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழியின் பெயரில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், அமித்ஷா படத்திற்கு பதிலாக சினிமா இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் படம் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டருக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜ நிர்வாகி அருள்மொழி கூறினார். தமது பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை