பாஜ கொடிக்கு தீ வைப்பு: வாலிபரின் பின்னணி என்ன? பரபரப்பு BJP flag defaced youth detained BJP men
கோவை கணபதி பகுதியில் உள்ள கே.கே நகரில் பா.ஜ. கொடி கம்பம் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் அங்கு வந்த ஒரு வாலிபர், கொடி கம்பத்தில் இருந்த கயிற்றை கத்தியால் அறுத்து கொடியை கீழே இறக்கினார். கொடியை கத்தியால் கிழித்தார். பிறகு சாலையில் போட்டு தீ வைத்தார். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொடியில் பற்றிய தீ உடனே அணைந்து விட்டது. இதனால் மீண்டும் எரிக்க தீப்பெட்டி வாங்கி வர அந்த வாலிபர் அருகிலுள்ள கடைக்கு சென்றார். அதற்குள் பா.ஜ விளையாட்டுபிரிவு மாவட்ட துணை தலைவர் பிரனேஷ் உள்ளிட்ட பாஜவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொடியை எரிக்க முயன்ற வாலிபரை தடுத்து நிறுத்தி சரமாரி தாக்கினர். யார் சொல்லி இந்த வேலையை செய்தாய்? என பாஜவினர் கேட்க, திமுக சொல்லித்தான் செய்தேன் என அந்த வாலிபர் சொன்னார். ப்ரத் சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று வாலிபரை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பாஜ கொடியை எரிக்க முயன்ற வாலிபர் ஒண்டிப்புதுார் பகுதியை சேர்ந்த டோமினிக் பிரசாந்த் 28 என்பது தெரிய வந்தது. கணபதி பகுதியில் அறை எடுத்து வேலைக்கு சென்று வந்துள்ளார் என தெரிய வந்தது.