ஜாபர் ரயிலை Hijakஐ தொடர்ந்து ராணுவ கான்வாய் தகர்ப்பு BLA attack on army convoy| balochistan
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை பிரித்து தனி நாடாக தர வேண்டும் என்று BLA எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப்படை பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதம் எந்தி போராடி வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் பலூசிஸ்தானின் நோஷ்கி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஈரானின் எல்லையில் உள்ள தஃப்தான் என்ற இடத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு நோஷ்கி வழியாக 8 பஸ்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை, ராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது மோதி தற்கொலை படைதாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பஸ் வெடித்து சிதறியதில் அதில் இருந்த ராணுவ வீரர்கள் அனைவரும் இறந்தனர். அங்கு பதுங்கியிருந்த பலூச் கிளர்ச்சியாளர், உடனே மற்றொரு பஸ்சை சுற்றி வளைத்து அதில் இருந்தவர்கள் சுட்டுக்கொன்றனர். மொத்த 90 பாகிஸ்தான் ராணுவத்தினரை கொன்றுவிட்டதாகவும் இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பு ஏற்பதாகவும் பலூச் விடுதலை ராணுவம் அறிவித்தது. ஆனால், BLAவின் தற்கொலை படை தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் 35 பேர் காயம் அடைந்ததாகவும் நோஷ்கியை சேர்ந்த முகமது ஜாபர் என்ற போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலூசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்தி கண்டனம் தெரிவித்தார். கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார். சமீபத்தில், பலூசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது , பலூச் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வீசி 450 பேரை சிறைபிடித்தனர். 2 நாள் போரட்டத்துக்கு பின் பயங்கரவாதிகளை கொன்று பயணிகளை மீட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், அது உண்மையில்லை என பலூச் கிளர்ச்சி படை சொன்னது. எங்கள் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு ஏற்காததால் 214 பிணை கைதிகளை சுட்டுக்கொன்றோம் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் தான் பொறுப்பு என கூறியது