உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏமன் கடலில் படகு கவிழ்ந்து 68 பேர் மரணம்: 74 பேரை மாயம் boat accident | Gulf of Aden |Ethiopia

ஏமன் கடலில் படகு கவிழ்ந்து 68 பேர் மரணம்: 74 பேரை மாயம் boat accident | Gulf of Aden |Ethiopia

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அடிக்கடி ஏற்படும் உள்நாட்டுப் போர்கள் மற்றும் மோதல்களால், அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் வளைகுடா அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு தேடி புலம்பெயர்கின்றனர். கடத்தல்காரர்களின் படகுகளில்பாதுகாப்பற்ற முறையில் இவர்கள் பயணம் செய்கின்றனர். செங்கடல் மற்றும் ஏமனின் ஏடன் வளைகுடாவில் படகுகள் கவிழ்ந்து ஏராளமானவர்கள் இறக்கின்றனர். எத்தியோப்பியாவைச் சேர்ந்த 154 பேர் அரபு நாட்டுக்கு செல்வதற்காக படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். நேற்று ஏமனின் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றபோது அப்யான் மாகாணத்திற்கு Abyan province அருகிலுள்ள கடல் பகுதியில் படகு மூழுகியது. இதில் 68 பேர் இறந்தனர், 12 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர், 74 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஏமன் அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது என ஐநா சபையின் சர்வதேச இடம்பெயர்வு நிறுவனத்தின் (IOM) ஏமன் தலைவர் அப்து சாட்டர் எசோவ் தெரிவித்தார்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை