பயணிகள் படகு மீது நேவி போட் மோதியது எப்படி? Boat capsized off Mumbai coast 13 died 10 passengers fe
அரபிக்கடலில் உள்ள சுற்றுலா தலமான எலிபென்டா தீவுக்கு மும்பை கடற்கரையில் இருந்து நீல் கமல் என்ற பயணிகள் படகு இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என 110 பேர் இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் கடற்படைக்கு சொந்தமான விரைவு ரோந்துப்படகு ஒன்று இன்ஜின் வேக சோதனையில் ஈடுபட்டிருந்தது. இன்ஜின் எந்தளவுக்கு ஸ்பீட் கொடுக்கிறது என்பதை சோதிப்பதற்காக அதிவேகத்தில் ஸ்பீட் போட்டை இயக்கி கடற்படை வீரர்கள் சோதித்து கொண்டிருந்தார். ரோந்து படகில் கடற்படை வீரர்கள் மற்றும் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தினர் என 5 பேர் இருந்தனர். அதிவேகத்தில் யூ டர்ன் அடித்து சீறிப்பாய்ந்த ரோந்துப்படகு, திடீரென நீல்கமல் படகை நோக்கி மோதுவதுபோல வந்தது. மோதுவதை தவிர்க்க கடைசி நேரத்தில் கடற்படை வீரர்கள் செய்த முயற்சி பலனளிக்காமல் போனது. அதிவேகத்தில் நீல் கமல் படகு மீது ரோந்து படகு மோதியது. இதில், நீல்கமல் படகு கடலில் மூழ்க தொடங்கியது. படகில் இருந்த பயணிகள் அலறினர். நிறைய பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர்.