உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாயமானவர்களை தேடும் பணியில் கடற்படை தீவிரம் Boat capsized off Mumbai coast

மாயமானவர்களை தேடும் பணியில் கடற்படை தீவிரம் Boat capsized off Mumbai coast

மும்பை கடற்கரையில் இருந்து எலிபென்டா தீவுக்கு நீல் கமல் என்ற படகு சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்று வருகிறது. இன்று மாலையில் 80 பயணிகள், 5 ஊழியர்களுடன் எலிபென்டா தீவுக்கு படகு சென்று கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்த மற்றொரு அதிவேக படகு, நீல்கமல் படகை சுற்றி வந்த நிலையில் திடீரென மோதியது. இதில் நீல் கமல் படகு கடலில் மூழ்க தொடங்கியது. அதில் இருந்த பயணிகள் மரண ஓலம் எழுப்பினர். லைப் ஜாக்கெட் அணிந்திருந்த பயணிகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் இறங்கினர். breath 11 கடற்படை படகுகள், 3 மரைன் போலீஸ் கப்பல்கள் மற்றும் ஒரு கடலோர காவல்படை படகுகள் பயணிகளை மீட்க சென்றன. கூடுதலாக 4 ஹெலிகாப்டர்களும் சென்றன. மீனவர்களும் மீட்பு பணியில் உதவினர் நீல்கமல் படகில் பயணித்த 85 பேரில் 75 பேர் மீட்கப்பட்டனர். 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். 8 பேரை தேடும் பணி தொடர்கிறது. மோதி விபத்தை ஏற்படுத்திய படகு கடற்படைக்கு சொந்தமானதாக சொல்லப்படுகிறது. ஆனால், கடற்படை அதை உறுதிப்படுத்தவில்லை.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி