/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதிய நடிகரின் கார் actor bobbysimha| actor car accident
அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதிய நடிகரின் கார் actor bobbysimha| actor car accident
சென்னை ஆலந்தூர் கத்திப்பாரா மேம்பாலம் அருகே அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று, முன்னாள் சென்று கொண்டு இருந்த டூவீலர் மீது மோதியது. நிற்காமல் சென்ற கார், அடுத்தடுத்து 2 பைக்குகள், ஆட்டோ, கார் என 5 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. கார் மோதியதில் பெரும்பாக்கத்தை சேர்ந்த முத்துசாமி, நுங்கம்பாளைம் சரவணன், கேகே நகர் சுந்தர்ராஜ், குரோம்பேட்டை ஆராதனா உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரங்கிமலை போலீசார் விசாரித்ததில், விபத்தை ஏற்படுத்திய கார், நடிகர் பாபிசின்ஹாவின் கார் என்பது தெரிந்தது. காரில் அவர் இல்லை.
ஏப் 19, 2025