உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இமெயிலில் வந்த மிரட்டலால் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு | Bomb Thread | EPS House | Chennai

இமெயிலில் வந்த மிரட்டலால் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு | Bomb Thread | EPS House | Chennai

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டசபை எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இமெயிலில் மிரட்டல் வந்தது. ஸ்பாட்டிற்கு விரைந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பழனிசாமி வீடு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு ஏதும் இல்லை. மிரட்டல் வந்த இமெயில் ஐ.டி குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசார் திரட்டி வருகின்றனர். இமெயில் எங்கிருந்து வந்தது, அதை அனுப்பியது யார் என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது. வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி