உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே நாளில் 18 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்| Bomb threat | Airlines | Vistara |Threat continues

ஒரே நாளில் 18 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்| Bomb threat | Airlines | Vistara |Threat continues

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.அதிலும், விமானங்கள் புறப்பட்ட பிறகு பல மிரட்டல்கள் வருகின்றன. இந்த பிரச்னை மத்திய அரசு, விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று 32 விமானங்களுக்கு மிரட்டல் வந்த நிலையில், இன்றும் 18 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பை - சிங்கப்பூர், டில்லி - சிங்கப்பூர், சிங்கப்பூர் - புனே, சிங்கப்பூர் - டில்லி உள்ளிட்ட சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் உட்பட 6 விஸ்தாரா விமானங்களுக்கு இன்று மிரட்டல்கள் வந்தது. அதுமட்டுமின்றி 6 இண்டிகோ விமானங்கள், ஏர் ஆகாசா நிறுவனங்களை சேர்ந்த விமானங்களுக்கும் மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டலால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 6 நாட்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. பரபரப்பான சோதனைகளுக்கு பின் அத்தனையும் புரளி என்பது தெரிகிறது. வெத்து வெடிகுண்டு மிரட்டலால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. விமானத்தை தரையிறக்குவது, எரிபொருள் செலவு, பயணிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு முறையும் விமான நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் தொடர்ந்து வந்த மிரட்டல் சம்பவங்களால் ரூ.80 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நிலையில், இப்போது சில சோசியல் மீடியா கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். மிரட்டல் விடுக்கும் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற தீய சக்திகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விமானங்கள் மட்டுமின்றி கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சாம்ப்ரா விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ