ராணா வரும் நாளில் மிரட்டல்: பரபரப்பை பற்றவைத்த போன் கால் Bomb Threat to Delhi Red fort| Bomb th
டில்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 9 மணிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், டில்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் விரைவில் அது வெடித்துச் சிதறும் எனவும் கூறி இணைப்பை துண்டித்தார். இதையடுத்து டி்லலியின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். செங்கோட்டை மற்றும் மசூதிக்கு போலீசார் விரைந்தனர். மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்களும் களத்தில் இறங்கினர். டில்லியில் மைப்பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டை மற்றும் மசூதியில் குண்டு வைத்திருப்பதாக தகவல் பரவியதை அடுத்து பொதுமக்கள் பீதி அடைந்தனர். போலீசார் அங்குலம் அங்குலமாக நீண்ட நேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. போன் அழைப்பு வெறும் புரளி என தெரிய வந்தது. 2008 மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ராணா, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டான். அவன் டில்லி அழைத்து வரப்படும் நாளில், வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீசார் அலெர்ட் ஆகினர். இதே போல், கடந்த மாதமும் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம போன் கால் வந்தது.