பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடத்தில் பிரம்மானந்த சரஸ்வதி சாமி பேச்சு! Brahmananda Saraswati Swami | Arsh
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடத்தில், லலிதா திரிசதி வகுப்பு நடந்தது. பூஜ்யஸ்ரீ ததேவாநந்த சரஸ்வதி சாமிகள் தலைமை வகித்தார். இதில் மலேசியா ஆர்ஷ வித்யா ஞானாலயம் பூஜ்யஸ்ரீ பிரம்மானந்த சரஸ்வதி சாமிகள் பேசியதாவது: எங்கும் நிறைந்த இறைவன் தாய்மையில் பூரணமாக திகழ்கிறார். லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, கட்கமாலா போன்ற தேவி ஸ்தோத்திரங்கள் யாவும் அம்பாளை, தாய்மையின் முழுமையாக வைத்து போற்றுகிறது. கருப்பையை பெண்களிடம் வைத்து, உயிர் அணுவை உருவமாக படைக்கும் முழு படைப்பு திறனும் தாய்மையில் உள்ளது. பெண்மையை தேவியாக பாரத தேசமெங்கும் கொண்டாடுகின்றோம். படைத்தவனின் கருணையை போற்ற வேண்டும் என்பதால், பாரதமாதா, கங்காதேவி, தாய்நாடு, தாய்மொழி என சக்தியின் பிரவாகமாக பாரதமெங்கும் பெயர் சூட்டினர். படைத்து, காத்து, அருளுகின்ற தியாக குணம் கொண்டது பெண்மை. மனிதகுலம் மட்டுமின்றி, மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, கடல் என அனைத்திலும் பெண்மை வெளிப்படுகிறது. நடைமுறை வாழ்வில் பலவித துன்பங்களுக்கு போட்டி, பொறாமை முதலான, பல்வேறு குண நலன்களுக்கு ஆட்பட்டு தான் ஆக வேண்டும்.