தவெக ஆட்சி அமைக்க ஆதரவா, இல்லையா: விசிக நிர்வாகிகள் முக்கிய அறிவிப்பு
சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக ஆட்சி அமைக்க தலா 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்துள்ளன 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிகவின் ஆதரவை கோரியிருந்தார் விஜய் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார் விசிக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசித்த நிலையில் இன்று காலை திருமாவளவன் முடிவுை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது இந்நிலையில், ஆலோசனை அனைத்தும் முடிந்துவிட்டது முடிவு எடுக்கும் அதிகாரம் திருமாவளவனுக்கு வழங்கப்பட்டுள்ளது தவெகவுக்கு ஆதரவா இல்லையா என்பதை இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் அறிவிப்பார் என விசிக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.