BREAKING: மீண்டும் எல்லை தாண்டிய 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை!
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் கடந்த மாதம் 27ம் தேதி வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது யாழ்பாணம் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடந்தது கைதான மீனவர்களில் 5 பேர் முதல் முறையாக எல்லை தாண்டி வந்ததால் கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது மீதமுள்ள 3 பேர் இரண்டாவது முறையாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததால் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது மூவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் குறித்த வழக்கு 2025 ஜனவரியில் விசாரிக்கப்படும் என இலங்கை கோர்ட் அறிவித்தது