BREAKING: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா 2013ல் சென்னையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி விசாரணை கோர்ட் தீர்ப்பளித்தது தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 9 பேரும் மேல்முறையீடு செய்தனர் இதை விசாரித்த ஐகோர்ட் அவர்களின் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுனை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட் பட்டப்பகலில் நடந்த படுகொலை வழக்கில் விசாரணை கோர்ட் வழங்கிய தண்டனையை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை புரிந்துகொள்ள முடியவில்லை இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது