உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா

புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86 ஆயிரம் ஏழைகளுக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் 29,187 பேர் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் வசிக்கும் 57,084 பேர் இந்த முடிவால் பயன் பெறுவர். மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படவுள்ளது இதன் மூலம் 63 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ