மலை உச்சியில் தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று 7 மணிக்குள் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை அரசுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாரர் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்றே மலை உச்சியில் கர்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு மதுரை கலெக்டர் பிறப்பித்த 144 தடை உத்தரவையும் நீதிபதி ரத்து செய்தார் திருப்பரங்குன்றம் மலை மீது மனுதாரர் தீபம் ஏற்றலாம்; மதுரை போலீஸ் கமிஷனர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு
டிச 04, 2025