உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேரம் பேசிய வீடியோ பரவியதால் சஸ்பெண்ட் ஆன ஆர்ஐ! Bribe Case | RI Suspend | Salem

பேரம் பேசிய வீடியோ பரவியதால் சஸ்பெண்ட் ஆன ஆர்ஐ! Bribe Case | RI Suspend | Salem

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆர்.ஐ.யாக பணிபுரிந்த கனிமொழி, தடையில்லா சான்று பெற ஒருவரிடம், லஞ்சம் கேட்கும் வீடியோ பரவியது. அந்த வீடியோவில், தாசில்தாருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும்; மற்றவர்களையும் பார்க்க வேண்டும் என பேசி இருந்தார். தினமலர் சேனலிலும் இந்த செய்தி வெளியானது. இதனை பார்த்த சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆர்.ஐ கனிமொழியை, சஸ்பெண்ட் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா இன்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் விசாரணை நடந்து வருவதாக, வருவாய்த்துறையினர் கூறினர்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை