லஞ்சம்வாங்கிய சார்பதிவாளர், உதவியாக இருந்த பெண் கைது Sub Registrar arrested in Karaikudi| Bribe
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நகை வியாபாரி வைரவேல், தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை இரு தினங்களுக்கு முன் 4 வெவ்வேறு நபர்களிடம் விற்பனை செய்தார். இதற்கான பத்திரப்பதிவு காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இரு தரப்பினரும் கொடுக்கல், வாங்கல் முடித்து பத்திரப்பதிவும் முடிந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வழங்க, சார் பதிவாளர் முத்துப்பாண்டி 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். வைரவேலிடம் நிலம் வாங்கியோர் அவரிடம் இது குறித்து சொல்லவே, வைரவேல் பத்திர எழுத்தர் புவனப்பிரியாவிடம் இது குறித்து விசாரித்தார். லஞ்சப் பணம் பெறாமல் முத்துப்பாண்டி பத்திரங்களை வழங்க மாட்டார் என புவனப்பிரியா கூறினார்.