லஞ்ச ஒழிப்பு துறை பொறியில் பெண் அலுவலர் சிக்கியது எப்படி?
தருமபுரியை சேர்ந்தவர் சாய் கீதா. வயது 58. கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை சார் பதிவாளராக உள்ளார். இவர் அலுவலகத்தில் தினமும் நடக்கும் ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் குறிப்பிட்ட சதவீத தொகையை லஞ்சமாக பெற்று வந்தார். அந்த பணத்தை நேரடியாக வாங்காமல், புரோக்கர்கள் மூலம் வசூலிப்பார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, புரோக்கர்கள் வசூலிக்கும் லஞ்சத்தை வாரம்தோறும் அவர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கிக்கொள்வார். வார இறுதியில் அவர் தன் காரில் தருமபுரியில் உள்ள சொந்த வீட்டிற்கு செல்வது வழக்கம். ஊருக்கு செல்லும் போது, அந்த வார கலெக்ஷன் தொகையை புரோக்கர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வார். பல புரோக்கர்கள் வசூலிக்கும் லஞ்சத்தை ஒரு புரோக்கர் பொறுப்பேற்று கலெக் ஷன் செய்து சாய் கீதாவிடம் சேர்த்துவிடுவார்