லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் ஊட்டி கமிஷனர் சிக்கியது எப்படி
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி நகராட்சி கமிஷனராக இருப்பவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் லஞ்சப்பணத்துடன் காரில் செல்வதாக ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தெட்டபெட்டா சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாடகை காரில் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் வந்தார். போலீசார் சோதனையிட்டபோது, அவரிடம் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இருந்தது. இந்த பணம் எப்படி வந்தது என போலீசார் கேட்க முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார், ஜஹாங்கீரை ஊட்டி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது. ஊட்டி நகராட்சியில் சில கட்டடங்கள் கட்டுவதற்கும், மறு சீரமைப்பு செய்யவும் அனுமதி வழங்க கமிஷனர் ஜஹாங்கீர் லஞ்சம் பெற்று வந்துள்ளார்.