/ தினமலர் டிவி
/ பொது
/ கங்கை ஆற்றில் கரையும் சுல்தான்கஞ்ச் - அகுவானி பாலம் | Bridge collaps | Bihar | 3rd time collaps | Un
கங்கை ஆற்றில் கரையும் சுல்தான்கஞ்ச் - அகுவானி பாலம் | Bridge collaps | Bihar | 3rd time collaps | Un
பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புதிய, பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் மழை வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 14 பாலங்கள் இடிந்துள்ளன. அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்திருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் பாகல்பூர் மாவட்டம் சுல்தான் கஞ்ச், ககரியா மாவட்டம் அகுவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் மீது 3.16 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் கட்டும் பணி 2015ல் தொடங்கியது.
ஆக 17, 2024