வாசகர்கள் கருத்துகள் ( 1 )
may be cm stalin wanted to check the quality and warranty
பணம் வந்தால் தான் பாலத்தை திறப்பேன்: காண்ட்ராக்டர் பிடிவாதம் | Bridge Contractor | Protest Blockade
திருப்பத்தூர் மாவட்டம் ராச்சமங்கலம் அடுத்துள்ளது பெருமாள் வட்டம் கிராமம். இங்குள்ள ஓடை மீது ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ராச்சமங்கலத்தை சேர்ந்த சிவாஜி என்பவர் பாலம் கட்ட டெண்டர் எடுத்தார். இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கிய கட்டுமான பணி 15 மாதங்களில் முடிந்தது. ஆனால் கட்டிய பாலத்துக்கான தொகை அவருக்கு வழங்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் பணம் வரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சிவாஜி, பாலத்தின் நடுவே கயிறு கட்டினார். அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாதபடி தடுத்தார்.
may be cm stalin wanted to check the quality and warranty