உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லண்டன் டு சென்னை விமான சேவை இன்று ரத்து! | British Airways | London Flight | Technical Error

லண்டன் டு சென்னை விமான சேவை இன்று ரத்து! | British Airways | London Flight | Technical Error

ென்னை டு லண்டன், லண்டன் டு சென்னை இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. லண்டனிலிருந்து பகலில் புறப்படும் விமானம் அதிகாலை 3.30க்கு, சென்னை ஏர்போர்ட் வந்து சேரும். பின் சென்னையில் இருந்து காலை 5.35க்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும். இதன்படி நேற்று லண்டனில் இருந்து 1 மணி அளவில் 360 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் சில மணி நேரத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு உள்ளது. வானில் வட்டமடித்து பறந்து விமானம் உடனடியாக திரும்பி லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் அவசரமாக தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இருமார்க்கத்திலும் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் இன்று ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காத பயணிகள் சென்னை வந்து காத்து இருந்தனர். ஏர்போர்ட் அதிகாரிகள் தகவல் கொடுத்து அவர்களை திருப்பி அனுப்பினர். விமானம் ரத்தால் 700க்கும் மேற்பட்ட பயணிகள் லண்டன் மற்றும் சென்னையில் அவதிக்குள்ளாகினர். அகமதாபாத் விமான விபத்துக்கு பின் உலகம் முழுதும் உள்ள ஏர்போர்ட்களில் விமானங்கள் புறப்படுவதற்கு முன் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று முறை சரிபார்க்கப்படுகிறது. அதையும் தாண்டி ஏற்படும் இது போன்ற பிரச்சனைகளால் பயணங்கள் ரத்து செய்யப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதை பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும் என சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் கூறினர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ