உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எல்லை பாதுகாப்புப்படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்

எல்லை பாதுகாப்புப்படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற அதிரடியாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்தும்வரை இந்தியா தண்ணீர் தராது என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி