ஆஸ்பிடல் டூ வீடு வரை 3 மணி நேர ஊர்வலம் | BSP state president | Armstrong's |tribute | Chennai
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெள்ளியன்று இரவு 8 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து மருத்துவமனை முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை முடிந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரவ 9.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.