/ தினமலர் டிவி
/ பொது
/ மேற்கு வங்க அரசியலில் புத்ததேவ் கடந்து வந்த பாதை Buddhadev Bhattacharjee | Passed away
மேற்கு வங்க அரசியலில் புத்ததேவ் கடந்து வந்த பாதை Buddhadev Bhattacharjee | Passed away
மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80. கடந்த ஆண்டு சுவாச கோளாறால் பாதிக்கப்பட்ட அவர், கொல்கத்தா மருத்துவமனையில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த சில நாட்களாக மீண்டும் சுவாச பிரச்னை ஏற்பட்டது. வீட்டில் சிகிச்சை பெற்ற அவர் இன்று காலை இறந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட தலைவர்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆக 08, 2024