உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா, பீகார் அள்ளிய திட்டங்கள் என்னென்ன? | Budget 2024 | Nirmala | Budget Live

ஆந்திரா, பீகார் அள்ளிய திட்டங்கள் என்னென்ன? | Budget 2024 | Nirmala | Budget Live

ஆந்திரம், பீகார் மாநில முதல்வர்கள் தங்களின் மாநில வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த கூடுதல் நிதி கோரியிருந்தனர். இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பீகார், ஜார்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ. 26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாரின் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும். பீகாருக்கு பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி நிதி வழங்கப்படும்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை