ஏழை, பெண்கள், விவசாயி, இளைஞர்களை மனதில் வைத்து பட்ஜெட் தயாரிப்பு! Budget 2024 | PM Modi | Nirmala
2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் நிர்மலா பேசியதாவது: இந்தியாவில் வரலாற்று சாதனையாக 3வது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பணவீக்கம் மிக குறைந்த நிலையிலே தான் உள்ளது. இந்தியா பொருளாதாரம் இன்னும் முன்னேறும் நிலையில் உள்ளது. பண வீக்கம் 4 % மாக குறையும். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு, இளைஞர்கள் திறன் முன்னேற்றம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.