உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இயற்கை வேளாண் திட்டங்களுக்கு 10 ஆயிரம் மையங்கள்! Budget 2024 | PM Modi | Nirmala

இயற்கை வேளாண் திட்டங்களுக்கு 10 ஆயிரம் மையங்கள்! Budget 2024 | PM Modi | Nirmala

லோக்சபாவில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார். விவசாய ஆராய்ச்சி, இயற்கை வேளாண்மை திட்டங்களுக்காக 10,000 மையங்கள் உருவாக்கப்படும். பருப்பு மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தி கையிருப்பு மற்றும் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய வளர்ச்சிக்காக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !