12 லட்சம் வரை வருமான வரி இல்லை: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு | No tax up to 12 lakh | Tax Reduce |
2025-26க்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அடுத்த வாரம் புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது என அறிவித்தார். 1961 முதல் 63 ஆண்டுகளாக உள்ள வருமான வரி சட்டம் மாற்றப்படுகிறது. இந்த மசோதா அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கும் எனவும் அவர் கூறினார். அதே சமயம் இன்றும் வருமான வரி பிடித்ததில் பல தளர்வுகளை அறிவித்தார். அதன் படி மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வாடகை மீதான வரி தள்ளுபடி 2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 2 சொந்த வீடுகளுக்கு வரி சலுகைகள் பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான வரம்பு 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.