/ தினமலர் டிவி
/ பொது
/ நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதில் அரசு உறுதி Building consensus |amongst all |kiren r
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதில் அரசு உறுதி Building consensus |amongst all |kiren r
டில்லி ஐகோர்ட் நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மார்ச் மாதம் அவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில் மூட்டை மூட்டையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உடனடியாக அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடம் மாற்றி உத்தரவிட்டார். நீதிபதி வீட்டில் மூட்டைகளில் பணம் இருந்தது குறித்து 3 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் குழு விசாரணை நடத்தியது. அவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு விசாரணை அறிக்கை தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவிடம் அளிக்கப்பட்டது.
ஜூன் 04, 2025