உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பந்தயத்தில் ஓடிய காளை முட்டி பெண் சீரியஸ் | Bullock cart race | Bull hit the woman | Injured | Sivag

பந்தயத்தில் ஓடிய காளை முட்டி பெண் சீரியஸ் | Bullock cart race | Bull hit the woman | Injured | Sivag

சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவ விழா, ஸ்ரீ சைவ முனிஸ்வரர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 62ம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பூஞ்சிட்டு பிரிவில் மொத்தம் 16 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சிவகங்கை காளையர்கோவில் சாலையில் நடந்த பந்தயத்தில் சாலை ஓரம் நடந்து சென்ற பெண்னை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளை ஒன்று எதிர்பாராத விதமாக முட்டி தூக்கி வீசியது. சாலையோரம் விழுந்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெண் மீது காளை முட்டி தூக்கி வீசும் வீடியோ இப்போது வைரலாக பரவுகிறது. (பிரத்) மாட்டு வண்டி பந்தயம் அனுமதி இன்றி நடந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவம் குறித்து காளையார் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று காலை நடந்த மாட்டுவண்டி போட்டியிலும் சாலை ஓரம் சென்ற பைக் மீது மோதியதில் மாட்டு வண்டியும் சரிந்தது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற நபரும், காளை ஒன்றும் படுகாயம் அடைந்தது. மாட்டு வண்டி பந்தயத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !