உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் அதிர வைத்த பஸ் விபத்து | Bus Accident | Chennai Bus Accident

சென்னையில் அதிர வைத்த பஸ் விபத்து | Bus Accident | Chennai Bus Accident

தடுப்பை உடைத்து பறந்தது பஸ்! பாலம் அடியில் நசுங்கிய ஆட்டோ நொடியில் நடந்த கோரம் சென்னை செங்குன்றத்தில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு தாம்பரம் நோக்கி டவுன் பஸ் கிளம்பியது. தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் வானகரம் ஓடமா நகர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. அங்குள்ள பாலத்தில் ஏறும் போது ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பிகளை உடைத்து பள்ளத்தை நோக்கி பாய்ந்தது. தடுப்புகளை தாண்டி இருந்த மரத்தையும் முறித்து பள்ளத்தில் சென்று சர்வீஸ் ரோட்டில் இறங்கியது. சர்வீஸ் ரோட்டில் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்று நின்றது. இதனால் ஆட்டோவின் முன்பகுதி உருக்குலைந்து போனது.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை