உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டூர் வந்த 25 பேரின் உயிரை காப்பாற்றிய பஸ் டிரைவர்!

டூர் வந்த 25 பேரின் உயிரை காப்பாற்றிய பஸ் டிரைவர்!

புதுச்சேரியை சேர்ந்த 25க்கு மேற்பட்டோர் டூரிஸ்ட் பஸ்சில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு டூர் சென்றனர். சுற்றிபார்த்துவிட்டு ஊருக்கு கிளம்பினர். ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி அருகே நரியங்காடு என்ற இடத்தில் மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை. உடனே டிரைவர் சுதாரித்தார். முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தவர்களை உடனே பின்னால் செல்லுமாறு கத்தினார். பயணிகள் கம்பியை பிடித்துக்கொண்டு உயிர் பயத்தில் பின்னால் சென்றனர். பஸ்சை நிறுத்த முடியாத சூழ்நிலையில், சாலையோர வளைவில் பஸ்சை மோதவிட்டு நிறுத்தினார் டிரைவர். டிரைவர் உட்பட பஸ்சில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பின் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆபத்தான சமயத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு உயிரை டிரைவர் காப்பாற்றியதாக பயணிகள் தெரிவித்தனர்.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி