/ தினமலர் டிவி
/ பொது
/ ராணுவ வீரரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி | Bus seized | Court Order
ராணுவ வீரரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி | Bus seized | Court Order
தேனி போடிநாயக்கனூரை சேர்ந்தவர் குமார், வயது 26. 2017ல் ராணுவத்தில் காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். அப்போது சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்திருந்தார். போடி - தேனி செல்லும் சாலையில் பைக்கில் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதி இறந்தார். இது தொடர்பான வழக்கில் குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இழப்பீட்டு தொகையாக 41 லட்சத்து 24 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
செப் 19, 2025