உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எந்தெந்த பஸ்களுக்கு எவ்வளவு உயர்வு - முழு விவரம் | Bus ticket fare hike | Puducherry

எந்தெந்த பஸ்களுக்கு எவ்வளவு உயர்வு - முழு விவரம் | Bus ticket fare hike | Puducherry

6 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்தது பஸ் கட்டணம் இன்று முதல் அமல் புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின்படி ஏசி வசதி இல்லாத நகர பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5ல் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 13ல் இருந்து 17 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி உள்ள நகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 10ல் இருந்து 13 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 26ல் இருந்து 34 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் 3 ரூபாயும், அதிகப்பட்சம் 8 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதியில்லாத டீலக்ஸ் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12ல் இருந்து 16 ரூபாயாகவும், அதிகபட்சம் 36ல் இருந்த 47 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஏசி இல்லாத விரைவு பஸ்களுக்கு புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை